பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி – தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்வோம் வாருங்கள்!

சமீபத்தில் இணையெமுங்கும் பரவி இருந்த சீனர்களின் தமிழ்க்கல்வி, தமிழ் பேராசிரியையின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து இருப்போம். தமிழ் நாட்டிற்கு வெளியே தமிழில் உயர்கல்வி வாய்ப்பு இருக்கா? என சிலர் ஆச்சரியத்துடன் கேட்டனர். தமிழ் படித்தால் ஆசிரியர் வேலைக்கும் பேராசிரியராகவும் அல்லது அரசுத் தேர்வுக்கு செல்லவும் மட்டும்தானே முடியும் என பலர் சோர்ந்துவிடுகின்றனர்.

1708588_9439_2ஒரிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் சிந்துவெளி நாகரீகத்தின் தமிழ் வரலாற்றுத் தொடர்பை ஆய்வு செய்து வருபவருமான திரு. பாலகிருஷ்ண்ணன் தமிழ் இலக்கியம் படித்து, தமிழிலேயே இந்தியக் குடிமையியல் தேர்வினை (Civil Service exams) எழுதி இந்தியக் குடிமையியல் அதிகாரியாக  (IAS) வென்றுக்காட்டி அதன் உச்சத்தைத் தொட்டவர் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ் ஆராய்ச்சிக்கான வாய்ப்பைப் பற்றிப் பார்க்கும் முன், எல்லோருக்கும் அறிந்துக்கொள்ள வேண்டிய சில வரலாற்றுத் தகவல்களை சொல்லியாக வேண்டும்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து ஹென்றி ஹீராஸ் பாதிரியார் பம்பாயில் புனித சேவியர் கல்லூரிக்கு வரலாற்றுப் பேராசிரியராக 1922இல் வந்தப்பிறகுதான் இந்திய வரலாறு தொடர்பாக நிறையக் கற்கிறார். சிந்துவெளி நாகரீகத்தின் மெசபடோமிய தொடர்பினை நிறுவியதோடு சிந்துவெளி ஊர்களின் ஆரியத் தொடர்பினை மறுத்து உரைத்தவர். அவரது தொடக்கமே, சிந்துவெளிக்கும் தமிழருக்குமான தொடர்பினை இன்று ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பேரபோலா, ஆர். பாலகிருஷ்ணன் வரை ஆணித்தரமாக எடுத்துச்செல்ல முடிகிறது.

டென்மார்க்கில் இருந்து தரங்கபாடி வந்திருங்கி தமிழகத்திற்கு அச்சகத்தை அறிமுகப்படுத்திய சீகன்பால்கு முதல் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யூ. போப், ஆகியோர் ஐரோப்பியாவில் இருந்து தமிழகம் வந்து தமிழறிஞர்களாக வரலாற்றில் நிலைத்து இருக்கின்றனர். அமெரிக்காவின் ஜார்ஜ் ஹார்ட், ஷானன் சிஃபோர்டு, பிளேக் வெண்ட்வொர்த், பாலா ரிச்மன், டேவிட் சார்லஸ் பக் ஜெர்மனியின் தாமஸ் லோமன், பிரான்சின் பிரான்சுவா குரோ, இங்கிலாந்தின் ஆர்.இ. ஆஷரும், கிரிகோரி, கனடாவின் பிரெண்டா பெக், பின்லாந்து நாட்டு அஸ்கோ பர்ப்போலா, ஸ்லோவேகியாவின் மோனிக்கா டோர்னா, ர்ஷியாவின் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி  ஆகிய அறிஞர்கள் நிகழ்காலத்தில் தமிழறிஞர்களாக விளங்குகின்றனர். அவரவர் நாடுகளின் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபொழுது, முனைவர் விஜய்லட்சுமி அம்மையார், “பெர்கிலி பல்கலைக்கழகத்தில் 1975இல் இருந்து தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருப்போர் குறைந்தது 35 பேர் இருப்பர் எனக் கூறினார்.

skarmavbild_2017-08-24_kl._16.40.48அமெரிக்காவின் ஹார்டுவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவ இருக்கிறார்கள். கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாகி வருகிறது. அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாகி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிய ஆய்வுத் துறையில் தமிழ் ஆராய்ச்சி வாய்ப்புகள் இருக்கின்றன.

ஜெர்மனியின் கோலேன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மிக பிரபலாமன் ஒன்று.

இன்றும், பல்வேறு நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், இந்தியவியல் துறை, ஆசியவியல் துறைகளில் ஆராய்ச்சிப் பணிகளையும் பட்டப்படிப்பையும் வழங்கி வருகிறது. இந்திய அரசின் நிதியுதவி, ஒத்துழைப்பு எல்லாம் சமஸ்கிருத வகுப்பிற்கும் ஆராய்ச்சிக்குமென மட்டுமே இருந்து வந்தாலும், இத்துறைகளில் தமிழ் ஆராய்ச்சிகளும் அத்துறை பேராசிரியர்களின் ஈடுபாட்டால் நடந்துவருகிறது.

கீழே என்னால் முடிந்த அளவிற்கு எங்கெல்லாம் தமிழ்த்துறைகள், இந்தியவியல் துறைகள் இருக்கிறது என தொகுத்துள்ளேன். அதனை சரியாக கவனித்து தமிழ் படித்தோர் தங்கள் மேலதிக ஆய்வுகளை பல்வேறு நாடுகளில் செய்ய முனைய வேண்டும். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் தமிழ் ஆராய்ச்சியினைத் தொடர்வது மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், தமிழர் ரோமானியத் தொடர்பு, தமிழர் கிரேக்கத் தொடர்பு, தமிழர் மெசபடோமியத் தொடர்பு, தமிழரின் எரித்திரியக் கடல் வழி வணிகம், ஆப்பிரிக்கத் தமிழர்-தமிழ் தொடர்பு என ஆய்வுச் செய்ய வேண்டியத் துறைகள் ஏராளம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் இலக்கியம் படிப்போர் ஆங்கிலத்தை சரளமாக எழுதப் பேசக்கற்றுக்கொள்ளுங்கள். ஜெர்மன், பிரன்ச்சு, ஸ்பானிய, நோர்வேஜியன், சுவீடிஷ், டேனீஷ் ஆகிய மொழிகளில் ஒன்றினை குறைந்தது வாசிக்கும் அளவிற்காவது கற்றுக்கொள்ளுங்கள். Machine Language, Artificial Intelligence அல்லது கணினி மொழிகளில் ஏதேனும் ஒன்றினை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்னும் கூடுதல் சிறப்பு. ஆய்வுத்துறை மட்டுமல்லாது மொழிப்பெயர்ப்புத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உலகெங்கும் குவிந்துக்கிடக்கிறது.

இதற்கென்று தனியாக மெனக்கெட வேண்டுமா? எனச் சிந்திக்க வேண்டாம். பொறியியல் படித்தோர் GATE உள்ளிட்டப் போட்டித் தேர்வுகளுக்காக ஓரிரு ஆண்டுகள் படித்துத் தேர்ச்சிப் பெறுகின்றனர். NEET, JEE உள்ளிட்டத் தேர்வுகளுக்கு 2-3 ஆண்டுகள் படித்தே தேர்ச்சி பெறுகின்றனர். TOEFL, IELTS, GRE உள்ளிட்ட ஆங்கிலத் தேர்வுகளுக்காக சில மாதங்கள் பயிற்சி பெற்றே அடுத்தக் கட்டம் நகர்கின்றனர். ஆசிரியர் தேர்வு, பேராசிரியர் தேர்வு என எல்லாவற்றிற்கும் பல ஆண்டுகள் தொடர்ந்து படிப்போரும் உண்டு. அதுபோலத்தான் இதுவும். வாய்ப்புகள் இருக்கும்பொழுது அதைத்தேடிச் செல்வதும் அதற்கென தயாராவதும் வெற்றிக்கான முதல்படி. உங்கள் மனச்சோர்வையும் இயலாமை என்னும் முகமூடியையும் தூக்கித் தூர வீசினால், தமிழோடு உலக வலம் வரலாம்.

இந்தியவியல்-ஆசியவியல்-தமிழ்த்துறைகள் உலகெங்கும் ஒரு பார்வை:

அமெரிக்கா:

https://liberalarts.utexas.edu/asianstudies/languages/tamil.php

https://southasia.berkeley.edu/tamil-studies-initiative

https://indiast.indiana.edu/

http://www.southasia.upenn.edu/

https://www.lib.uchicago.edu/e/su/southasia/

https://oi.uchicago.edu//

http://southasia.as.virginia.edu/

கனடா:

http://umanitoba.ca/faculties/arts/departments/asian_studies/

logograntha_1080ஜெர்மன்:

https://gerit.org/en/institutiondetail/18325

Willkommen… स्वागतम्… ආයුබෝවන් … خوش آمدید

http://www.uni-koeln.de/phil-fak/indologie2/

https://www.glasenapp-stiftung.de/

https://www.ioa.uni-bonn.de/de/inst/suedasien/

http://staff-www.uni-marburg.de/~indology/

https://www.sai.uni-heidelberg.de/; https://www.uni-heidelberg.de/de/studium/alle-studienfaecher/kommunikation-literatur-und-medien-suedasiatischen-neusprachen?fbclid=IwAR2hG0hp36gec9QWP377lSn7ECsleV8c1_JFvvdf0RRZhg8c9sXvT295FKg

சுவிஸர்லாந்து:

http://www.indologie.unizh.ch/

சுவீடன்:

https://www.su.se/asia/

https://www.lingfil.uu.se/indology/

டென்மார்க்:

https://tors.ku.dk/uddannelser/#asien

நோர்வே:

https://www.hf.uio.no/ikos/english/

இங்கிலாந்து:

Home

https://www.soas.ac.uk/

https://www.ames.cam.ac.uk/about-us

https://www.orinst.ox.ac.uk/

நெதெர்லாந்து:

https://www.iias.asia/

Sanskrit, Vedic and related studies (Indology), and Hinduism

https://www.rug.nl/research/portal/publications/the-sacred-centre-as-the-focus-of-indological-research(03d41456-0fdd-4ad6-853d-03c94f542bd7).html

இத்தாலி:

Home

http://www.tessitori.org/

போலாந்து:

https://filg.uj.edu.pl/eindex.phtml

AKTUALNOŚCI

ஜப்பான்: 

http://www.aa.tufs.ac.jp/ja/about

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s