ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன? எப்படி அணுகுவது?

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி படிக்கும் நம்மூர் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தாலும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தான பல தகவல்கள் நம்மூரின் பலத்தரப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை.

வாய்ப்புகளை எப்படி தெரிந்துக் கொள்வது? யாரை அணுகுவது? எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்வது? போன்ற வினாக்களுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களை சேகரித்து தொகுத்துள்ளேன்.

Freeeducation

ஐரோப்பிய நாடுகளில் வாழும்பொழுது கல்விக்கட்டணம் தவிர்த்து வாழ்க்கைச் செலவுதான் பெரும்பாலும் நம்முடைய செலவாக இருக்கும். அதுவும் வாரத்திற்கு 20 மணி நேரம் சட்டரீதியாக பகுதி நேர வேலைக்கான வாய்ப்புள்ளதால் பெரும்பான்மை செலவீனங்களை பகிர்ந்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலுமான்வற்றில், திருமண பந்தம் சார்ந்து குடியேறி வாழ்பவர்களுக்கு கல்வி இலவசமே! அல்லது மிகக் குறைந்தக் கல்விக்கட்டணம் இருக்கும். உதாரணமாக, தமிழ்நாட்டில் இருந்து ஆணோ, பெண்ணோ வேலை நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பொழுது, அவர்களின் இணையருக்கு கல்வி இலவசமாக கிடைக்கலாம்.

ஆங்கிலத் தகுதித் தேர்வு சோதனைகளை எடுப்பது மிக அவசியம், ஆனாலும், ஆங்கில வழிக் கல்வியிலேயே பயில்பவர்களுக்கு சில பல்கலைக்கழகங்களில் சில பட்டப்படிப்புகளுக்குத் தேவைப்படுவதில்லை. அதனை, அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் மாணவ ஆலோகரைத் தொடர்புகொண்டு கேட்டால் ஆலோசனை வழங்குவர். IELTS, TOFEL, Cambridge test ஆகியவை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்குத் தேவைப்படும் சோதனைகள். தகுதித் தேர்வில் தேவைப்படும் மதிப்பெண்கள் பல்கலைக்கழகம் பொறுத்து மாறுபடும்.

குறிப்பு: கீழே நாடுகள் வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ள கல்விக்கட்டணம், வாழ்க்கைச் செலவுக் கட்டணம், வங்கி வைப்புத் தொகை அனைத்தும் அந்தந்த நாடுகள் மற்றும் பல்கலைக்கழக சட்டங்களின் படி மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பிக்கும் முன் அந்தந்த பல்கலைக்கழக மாணவ ஆலோசகரைத் தொடர்புக்கொண்டு தெளிவைப் பெறுவது அவரவர் பொறுப்பு.

1) நோர்வே நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்

 ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவிலான கல்விக்கட்டணம் உள்ள நாடுகளில் நோர்வேயும் ஒன்று. மாணவச் சங்கங்கள், ஏனைய சிறுக் கட்டணம் என வருடத்திற்கு 10000 ரூபாய் வரை ஆகலாம் மற்றும் சில பட்டப்படிப்பிற்கு வருடத்திற்கு 10000 முதல் 20000 வரையில் கூடுதல் கட்டணம் ஆகலாம். தனியார் பல்கலைக்கழகங்களில் மட்டும் வருடத்திற்கு 5,50,000 முதல் 8,00,000 ரூபாய் வரை செலவு ஆகும்.

நோர்வே நாட்டுப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை இளநிலை பட்டப்படிப்பு ஆங்கிலத்தில் இல்லை. நோர்வேஜிய மொழியிலேயே இருக்கிறது. முதுநிலைப் பட்டப்படிப்பே ஆங்கில வழியில் இருப்பதால் அதுமட்டும்தான் நம்மூர் மாணவ, மாணவியருக்கு பொருந்தும்

அனைத்துவிதமானத் தகவல்களையும் https://www.studyinnorway.no/ என்ற முகவரியில் காணலாம்.

ஆனால் மாணவ நுழைவுரிமை (Student visa) பெற இரண்டாண்டு கல்வியின் பொழுது வாழ்வதற்கான வாழ்க்கைச் செலவிற்கான ஒட்டுமொத்தத் தொகையினை வங்கியில் கணக்கு காட்ட வேண்டும். அதாவது வருடத்திற்கு 8,75,000 ரூபாய். இரண்டாண்டிற்கு 17,50,000 ரூபாய் என முதலிலேயே வங்கியில் வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும்.

 1அ) ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை விவரங்கள் குறித்து அறிய https://www.scholars4dev.com/category/country/europe-scholarships/norway/ மற்றும்

https://www.studyinnorway.no/study-in-norway/find-available-scholarships-and-grants

என்ற முகவரியில் படித்து அறியவும்.

1ஆ) நோர்வே நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

 • University of Oslo
 • University of Bergen
 • Norwegian University of Science and Technology
 • University of Stavanger
 • Western Norway University of Applied Sciences
 • University of Tromso
 • University of Agder
 • University Center in Svalbard
 • Norwegian School of Economics
 • Norwegian University of Life Sciences
 • University of Nordland

2) ஜெர்மன் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்

 ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பெரும்பாலான மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள் இலவச இளநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றன. எனினும் மிகக் குறைந்த அளவிலான கல்விச்சங்கக்கட்டணம் அவசியம்.

Baden-Wurttemberg, Bavaria, Hamburg, and Lower Saxony ஆகிய மாநிலப் பல்கலைக்கழகங்கள் வருடத்திற்கு 40,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை கல்விக்கட்டணச் செலவு ஆகிறது. ஏனைய மாநிலங்களில் கல்விக்கட்டணம் இலவசம் மற்றும் ஏனையச் செலவுகள் 4000 முதல் 10000 ரூபாய் வரை ஆகிறது.

முதுநிலைக் கல்விக்கு (Master’s Programmes) 55,000 முதல் 2,75,000 ரூபாய் வரை ஆகலாம்.

வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு 65,000 முதல் 80,000 வரை ஆகலாம்.

மாணவ நுழைவுரிமைக்கு (student visa) விண்ணப்பிக்கும் பொழுது வங்கியில் வைப்புத் தொகையாக 7,75,000 ரூபாய் அவசியம். இது ஒரு வருடத்திற்கானது.

ஏனைய விவரங்கள் https://www.germany-visa.org/student-visa/student-visa-visum-zu-studienzwecken/ என்ற முகவரியில் காணலாம்.

 2அ) ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை விவரங்கள் குறித்து அறிய https://www.scholars4dev.com/6643/scholarships-in-germany-for-international-students/ என்ற முகவரியில் படித்து அறியவும்.

2ஆ) ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

 • University GISMA Business School
 • Berlin School of Business and Innovation
 • Lancaster University Leipzig
 • Technische Universität München
 • Universität Heidelberg
 • Freie Universität Berlin
 • Georg-August-Universität Göttingen
 • Berufsakademie Ravensburg
 • DEKRA | Hochschule für Medien
 • Dortmund University
 • Dresden Technical University
 • Ernst-Moritz-Arndt-University Greifswald
 • Europa-Universität Viadrina Frankfurt (Oder)
 • Fachhochschule Fulda
 • Fachhochschule Karlsruhe
 • Fachhochschule Reutlingen, Hochschule fär Technik und Wirtschaft
 • Frankfurt University
 • Friedrich Schiller Universität, Jena
 • Hochschule Offenburg
 • Humboldt-University, Berlin

3) நெதெர்லாந்து நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்

நெதெர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்களில், வருடாந்திர கல்விக்கட்டணம் இளநிலை கல்விக்கு (Bachelor’s programmes) 4,75,000 முதல் 11,65,000 ரூபாய் வரை ஆகலாம். முதுநிலைக் கல்விக்கு (Master’s Programmes) 6,25,000 முதல் 15,50,000 ரூபாய் வரை ஆகலாம்.

மாணவ நுழைவுரிமைக்கு (student visa) விண்ணப்பிக்கும் பொழுது வங்கியில் வைப்புத் தொகையாக 7,75,000 ரூபாய் அவசியம். இது ஒரு வருடத்திற்கானது.

நெதெர்லாந்து நாட்டில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள், பயனுறு அறிவியல் (Applied Sciences) பட்டப்படிப்பிற்கு 4 ஆண்டுகள், இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு 4 ஆண்டுகள் எனவும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு 4 ஆண்டுகள் எனவும் கால வகைப்படுத்தி உள்ளார்கள்.

பாடத்திட்டங்கள் மற்றும் காலம் பொறுத்து சில பல்கலைக்கழகங்களில் மேலே குறிப்பிட்டுள்ளத் தொகையினை விட குறைவாக இருக்கவும் வாய்ப்புண்டு. https://www.studyfinder.nl/ என்ற இணையத்தில் எந்த வகையான கல்விக்கு என்ன கல்விக்கட்டணம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை தேடிப்பார்க்கவும்.

3அ) ஊக்கத் தொகை நிலவரங்கள்:

நெதர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பன்னாட்டு மாணவ, மாணவிகளுக்கு என சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பின்பொழுது ஆண்டிற்கு குறைந்தது 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. கல்வி, பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகள் பொறுத்து தொகை மாறுபடலாம். வருடந்தோறும் பல நூறு மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகள், சீனா, தென் அமெரிக்க நாடுகளுக்க்கெனவும் ஐரோப்பிய குடியுரிமை உள்ளவர்களுக்கு எனவும் தனித்தனியே ஊக்கத்தொகை திட்டங்கள் செயல்படுவதால், பன்னாட்டளவில் இந்திய ஒன்றியத்தில் இருந்து செல்பவர்களுக்கு ஊக்கத் தொகை போட்டி குறைவாக இருக்கும் என நம்புகிறேன்.

மேலே குறிப்பிட்டத் தொகை பெரும்பாலும் கல்விக்கட்டணத்தின் பெரும்பங்கிற்கானது மட்டுமே. மாதந்தோறும் வாடகை, வாழ்க்கைச் செலவு என மாதந்தோறும் 40,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாய் ஆகலாம்.

ஊக்கத்தொகை குறித்த மேலதிக விவரங்களை https://www.studyinholland.nl/finances/financing-your-studies என்ற இணையத்தில் காணலாம்.

3ஆ) நெதெர்லாந்து நாட்டுப் பல்கலைக்கழக விவரங்கள்:

4) ஃபிரான்சு நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்

 ஃபிரான்சு நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பன்னாட்டு மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 2,25,000 முதல் 3,50,000 ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுகிறது. இது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு பொருந்தும்.

வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு 50,000 முதல் 65,000 வரை ஆகலாம்.

மாணவ நுழைவுரிமைக்கு (student visa) விண்ணப்பிக்கும் பொழுது வங்கியில் வைப்புத் தொகையாக 6,50,000 ரூபாய் அவசியம். இது ஒரு வருடத்திற்கானது.

ஏனைய விவரங்கள் https://www.mastersportal.com/articles/355/tuition-fees-and-living-costs-in-france.html மற்றும் https://www.educations.com/study-guides/europe/study-in-france/tuition-fees-12534 என்ற முகவரியில் காணலாம்.

 4அ) ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை விவரங்கள் குறித்து அறிய https://www.scholars4dev.com/category/country/europe-scholarships/france-scholarships/என்ற முகவரியில் படித்து அறியவும்.

4ஆ) ஃபிரான்சு நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

ஃபிரான்சு நாட்டுப் பல்கலைக்கழக தகவல்களை https://about-france.com/universities.htm என்ற முகவரியில் காணலாம்.

5) ஆஸ்திரியா நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்

ஆஸ்திரியா நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பன்னாட்டு மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் வருடத்திற்கு 1,16,500 முதல் 6,00,000 ரூபாய் வரை ஆகும். இது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு பொருந்தும்.

வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு 40,000 முதல் 65,000 வரை ஆகலாம்.

மாணவ நுழைவுரிமைக்கு (student visa) விண்ணப்பிக்கும் பொழுது 24 வயதிற்குள் உட்பட்டவர்கள் வங்கியில் வைப்புத் தொகையாக 4,50,000 ரூபாய் அவசியம், 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7,50,000 வரை வைப்புத் தொகையாக கணக்குக் காட்ட வேண்டும். இது ஒரு வருடத்திற்கான செலவு.

ஏனைய விவரங்கள் https://studylink.com/countries/austria/ என்ற முகவரியில் காணலாம்.

 5அ) ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை விவரங்கள் குறித்து அறிய https://studyinaustria.at/en/useful-tips/questions-and-answers/scholarships/ என்ற முகவரியில் படித்து அறியவும்.

5ஆ) ஆஸ்திரியா நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

https://www.edarabia.com/universities/austria/

6) சுவீடன் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

சுவீடன் நாட்டுப் பல்கலைக்கழக உயர்கல்வி தகவல்கள் குறித்து அறிய என் முந்தையப் பதிவினை காணவும்.

7) ஸ்பெயின் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள்:

ஸ்பெயின் நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பன்னாட்டு மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணமாக பொது பல்கலைக்கழகங்களில் வருடத்திற்கு 57,500 முதல் 1,10,000 ரூபாய் வரை ஆகும். தனியார் பல்கலைக்கழகங்களில் 4,55,000 முதல் 15,00,000 வரை செலவு ஆகும். இது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு பொருந்தும்.

வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு 50,000 முதல் 1,00,000 வரை ஆகலாம். இது நகரத்திற்கு நகரம், வீட்டு வாடகை பொறுத்து மாறுபடவும் செய்யலாம்.

மாணவ நுழைவுரிமைக்கு (student visa) விண்ணப்பிக்கும் பொழுது  வங்கியில் வைப்புத் தொகையாக 50,000 ரூபாய் அவசியம், அதே போல அடுத்தடுத்த மாதம் 50,000 ரூபாய் தங்கள் மகன்/மகளுக்கு வழங்கும் உத்திரவாத கடிதமும் பெற்றோரின் பொருளாதாரச் சான்றிதழ் விண்ணப்பத்தோடு சேர்த்து சமர்பிக்க வேண்டும்.

ஏனைய விவரங்கள் http://www.exteriores.gob.es/Consulados/MIAMI/en/InformacionParaExtranjeros/Documents/Requisitos%20visa%20estudios%20INGLES%2026-09-2019.pdf  என்ற முகவரியில் காணலாம்.

 7அ) ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை விவரங்கள் குறித்து அறிய https://spanishstudies.org/programs/scholarships/

https://www.barcelonagse.eu/study/financial-aid

என்ற முகவரிகளில் படித்து அறியவும்.

7ஆ) ஸ்பெயின் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

ஸ்பெயின் நாட்டின் முக்கியப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை கீழே உள்ள முகவரியில் காணலாம்

https://www.topuniversities.com/where-to-study/europe/spain/guide


ஏனைய நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தகவல்களை விரைவில் தொகுத்து வழங்குகிறேன்.

உயர்கல்வி வாய்ப்புகள், ஊர், செலவு, தங்குமிடங்கள் குறித்த சந்தேகங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட கேள்விகளை அந்தந்த நாட்டில் உள்ள அந்தந்த ஊர் தமிழ்ச்சங்கள் மூலமும் தகவல்கள் பெற்று தெளிவுப்பெறலாம். அந்தந்த தமிழ்ச்சங்கங்களின் தொடர்புகளை பெற முடியாவிட்டாலும் என்னுடைய மின்னஞ்சல் முகவரியான nano.vijaythamil@gmail.com  தொடர்புகொண்டால், தமிழ்ச்சங்கங்களின் தொடர்பினை உருவாக்கித் தர முயல்கிறேன்.

ஆனால், யாரை அணுகும் முன்னும், நீங்கள் யார், என்ன படிக்கிறீர்கள், என்ன வகையான உயர்கல்வி வாய்ப்புகளை தேடி வருகிறீர்கள், உங்கள் தற்போதைய மதிப்பெண்கள், ஆங்கில தகுதித்தேர்வு சோதனைகள் எடுத்துள்ளீர்களா? எடுக்க பயிற்சி எடுத்து வருகிறீர்களா? இப்படியான இன்னும் பிற சராசரி தகவல்களை வழங்கிவிட்டு கேள்விகளை கேட்பது நலம். பெயரோ, அலைப்பேசி எண்ணோ, நிழற்படமோ, அவசியம் ஏற்படாமல் வழங்க வேண்டியதில்லை என்பதை கவனத்தில் கொள்க.

– முனைவர் விஜய் அசோகன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s