உலக நாடுகளில் ஆராய்ச்சித் துறை வேலை வாய்ப்புகள் (அறிவியல் துறை)!

உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அயல்நாட்டினருக்கான பலத்தரப்பட்ட ஆராய்ச்சித்துறை பணி வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதனை எப்படி அணுகுவது, என்னென்ன திறன் மற்றும் தேர்ச்சி பெற்றிருப்பது என பலரது கேள்விகளுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களைத் திரட்டியுள்ளேன். முதற்கட்டமாக, அறிவியல் துறையின் வேலைவாய்ப்புகள் குறித்தான தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்!

முனைவர் பட்டத்திற்கான ஆய்வு என்பது ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்புப் போன்றதுதான். மாதாந்திர ஊதியமும் சில பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மாணாக்கருக்கு பாடம் எடுக்க வேண்டியதாகவும் கூட இருக்கும். எவ்வளவு ஊதியம் பெற முடியும் என்பதை அந்தந்த பல்கலைக்கழகத்தின் துறை மற்றும் ஆராய்ச்சிக்குழு வெளியிடும் வேலைவாய்ப்புச் செய்திகளில் காணலாம். இங்கே கிடைக்கும் ஊதியம் கொண்டு, கணவன், மனைவி குழந்தைகள் என குடும்பமாக வாழ போதியச் சூழல் இருக்கும்.

முனைவர் பட்ட ஆய்வுப்பணி – தேவையானத் தகுதிகள்:

  • நம்மூரில், முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் படிப்பின் பொழுது 6 மாத ஆய்வு அனுபவம், ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருத்தல், தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டிருத்தல் முதல் அவசியம்.
  • முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பின் பின்னரான, ஒன்று-இரண்டு ஆண்டுகள் ஆய்வுத்துறை அனுபவம் மற்றும் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருத்தல் கூடுதல் பலம் சேர்க்கும்.
  • சில பல்கலைக்கழகங்கள், IELTS, TOEFL, GRE போன்ற ஆங்கிலத் தகுதித் தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவர்.
  • முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பின் பொழுது, ஆராய்ச்சி அனுபவமும், சர்வதேச பதிப்பகங்களில் ஆய்வுக்கட்டுரைகள் (1-3) வெளியிட்டு இருந்தால் முன்னுரிமை கிடைக்கும்.
  • முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பின் பொழுதான ஆய்வுக்கட்டுரை வெளியீட்டில், அயலகப் பல்கலைக்கழகத்த்துடனான கூட்டு ஆய்வில் ஈடுபட்டிருப்பின் முன்னுரை கிடைக்கும்.
  • முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பின் பொழுது, ஆய்விற்காக 3-6 மாதங்கள் அயலகப் பல்கலைக்கழக ஆய்வகங்களில் பணியாற்றிருப்பின் முன்னுரிமை கிடைக்கும்.
  • முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் அதன் பின்னரான ஆராய்ச்சிப் பணியில், ஆய்வுக்கட்டுரைகளோடு, பன்னாட்டுக் கருத்தரங்கில் ஆய்வறிக்கை வெளியிட்டு இருத்தலும் அவசியம்.
  • கோட்பாட்டு அறிவியல் ஆராய்ச்சி எனில், அந்தந்த துறைச் சார்ந்த ஆராய்ச்சிக்கான கணினி மென்பொருள், காட்சிக்கணிதல் (Modelling), ஒப்புருவாக்கம் (Simulation) தொடர்பான ஆய்வு அனுபவம் மற்றும் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருத்தல் மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்க அனுபவம் அவசியம்.

இவையெல்லாம் கருத்தில் கொண்டு, முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

கீழே, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான், கொரியாவிற்கான வழிமுறைகளை விவரித்துள்ளேன். அமெரிக்க நாடுகளில் ஏனைய நாடுகளை விட வாய்ப்புகள் குறைவு என்பதோடு அணுகும் முறையும் வேறு வடிவிலானவை என்பதால் முதற்கட்டத்தில் அதனை தொகுக்கவில்லை.

Image result for science researchஐரோப்பிய நாடுகள்:

ஐரோப்பிய நாடுகளில், அந்தந் பல்கலைக்கழக பணியிட வாய்ப்புப் பக்கங்களில் முனைவர் பட்ட ஆராய்ச்சி முதல் முதுமுனைவர் ஆராய்ச்சி, ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர்களுக்கான வாய்ப்புகள் பற்றி விளம்பரம் வெளியிடுவர்.

இங்கே விதிகள் மற்றும் இணையதளங்கள் அனைத்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கானது மட்டுமே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஊக்கத்தொகையும் ஊதியமும் குறைவென்பதால் அதனை இங்கே வரிசைப்படுத்தவில்லை.

விதி 1: ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை விளம்பரங்கள் வெளியானப் பின்னே, அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள தகுதிகள், ஆவணங்கள், ஆய்வு அனுபவங்கள் உள்ளிட்டவைகள் கருத்தில் கொண்டு அணுக வேண்டும். தனிப்பட்ட பேராசிரியர்களின் மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பவதால் பலனில்லை.

விதி 2: ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலுமானவற்றில் எல்லா வாய்ப்புகளும், முதலில் அந்தந்த நாட்டினருக்கும், சிலப் பணியிடங்களில் குறிப்பிட்டிருப்பின் இரண்டாவது வாய்ப்பு ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்றிருப்பவர்கள், ஐரோப்பிய நாட்டில் கல்விக் கற்றிருப்பவர்கள் என ஒதுக்கப்பட்டிருக்கும். கவனமாக படித்துப் பார்த்து பணிக்கான விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விதி  3: ஐரோப்பிய நாடுகளில் மேலே குறிப்பிட்டிருப்பது போல அந்தந்த நாட்டினருக்கான முன்னுரிமை தவிர்த்து பெண்களுக்கென பணி வாய்ப்பு ஒதுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக சுவீடன் நாட்டில் 6 நபர்கள் விண்ணப்பித்து 5 நபர்கள் சுவீடன் நாட்டு ஆண்களாகவும் 1 நபர் தமிழ்நாட்டுப் பெண்ணாகவும் இருந்தால், அப்பணியிடச் செய்தியில் பெண்களுக்கான முன்னுரிமை எனக் குறிக்கப்பட்டிருந்தால் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கே வாய்ப்பு கிடைக்கும். முனைவர் பட்டம், முதுமுனைவர் ஆராய்ச்சி என அனைத்திற்கும் இது பொருந்தும்.

விதி 4: கேட்கப்பட்டிருக்கும் ஆய்வு அனுபவத்திலோ, கணினி மென்பொருள் அல்லது ஆராய்ச்சி உணர்கருவிகள் (instruments) போன்றவற்றில் நேரடி அனுபவம் இருப்பின் மட்டும் அணுகவும். வேலை கிடைத்து வந்தபின்னர், சரிவர கருவிகள் இயக்கத் தெரியாதவர்கள், பொய் சொன்னவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். எது தெரியுமா அதனை உறுதியாகச் சொல்லவும், தெரியாததை மறைக்காமல் சொல்லவும்.

விதி 5: முதுநிலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் பொழுதான உங்கள் ஆய்வு வழிகாட்டியோ, பாடம் எடுத்தப் பேராசிரியர்களிடம் உங்களைப் பற்றித் தெரிந்துக் கொண்டே உங்களை தேர்வு செய்வார்கள். ஆதலால், அவர்களுடனான உங்கள் உறவு முக்கியம். யாரைத் தொடர்புக் கொள்ளலாம் என நீங்கள் தான் பரிந்துரைக்கப் போகிறீர்கள் என்பதால், சரியான தொடர்பினை வழங்கவும்.

கீழே தொகுக்கப்பட்டுள்ள அந்தந்த நாட்டு விபரங்கள் முழுமையானதல்ல, என்னால் இயன்றதை மட்டும் தொகுத்துள்ளேன்.

நோர்வே:

https://www.jobbnorge.no/search

சுவீடன்:

https://www.chalmers.se/en/about-chalmers/vacancies/Pages/default.aspx

https://liu.se/en/work-at-liu/vacancies?rmpage=job&rmjob=11483&rmlang=UK

https://www.uu.se/en/about-uu/join-us/jobs/

https://www.kth.se/en/om/work-at-kth/lediga-jobb

https://www.su.se/cmlink/stockholm-university/about/working-at-su/jobs

https://www.lunduniversity.lu.se/vacancies

டென்மார்க்:

https://employment.ku.dk/phd/

https://www.dtu.dk/english/about/job-and-career/vacant-positions

https://phd.au.dk/vacant-phd-positions/

https://studyindenmark.dk/study-options/find-your-international-study-programme/phd-positions-1

ஃபின்லாந்து:

https://www.aalto.fi/en/open-positions

https://www.utu.fi/en/university/come-work-with-us/open-vacancies

https://en.academicpositions.se/jobs/country/finland

https://scholarshipdb.net/phd-scholarships-in-Finland

ஜெர்மன்:

https://www.tum.de/en/about-tum/working-at-tum/open-positions/

https://www.tuhh.de/alt/gbt/our-institute/vacancies-and-jobs.html

http://fd.tu-berlin.de/en/service/jobs/current-vacancies/

https://www.hu-berlin.de/en/promovierende-en/standardseite-en

https://tu-dresden.de/studium/vor-dem-studium/studienangebot/promotionsstudium?set_language=en

https://scholarshipdb.net/Humboldt-University-Berlin-scholarships-in-Germany

https://scholarship-positions.com/category/germany-phd-scholarships/

https://www.findaphd.com/phds/germany/?g0Mw00

https://www.research-in-germany.org/en/jobs-and-careers/info-for-phd-students/financing-your-phd/paid-positions—parttime-jobs.html

https://academicpositions.com/jobs/position/phd

https://www.mendeley.com/careers/jobs/germany/phd-doctoral/

https://www.daad.de/en/study-and-research-in-germany/phd-studies-and-research/phd-studies/

https://www.fu-berlin.de/en/sites/drs/phd/money/positions/index.html

https://www.universitypositions.eu/jobs/location/Germany

https://www.studying-in-germany.org/list-of-universities-in-germany/

பெல்ஜியம்:

https://www.ugent.be/en/work/vacancies

https://www.uantwerpen.be/en/jobs/vacancies/

https://www.kuleuven.be/personeel/jobsite/en/phd

https://en.academicpositions.se/jobs/country/belgium

https://www.universitypositions.eu/jobs/location/Belgium

https://be.linkedin.com/jobs/phd-position-jobs?position=1&pageNum=0

நெதெர்லாந்து:

https://jobs.tue.nl/en/vacancies.html#filter=p_type%3DSEARCH_RESULTS%26p_search%3D%26p_category_code_arr%3D6047-461661%26p_category_code_arr%3D6047-461662&page=1_blank

https://www.utwente.nl/en/education/tgs/prospective-candidates/phd/#doing-a-phd-will-probablybe-the-most-influential-time-in-your-personal-development-to-prepare-you-foryour-future-career

https://www.uu.nl/en/organisation/phd-programmes/obtaining-a-phd-position/phd-vacancies

https://www.maastrichtuniversity.nl/research/phd/paid-phd-positions

https://www.uva.nl/en/research/phd/obtaining-a-phd-at-the-uva/obtaining-a-phd-at-the-uva.html?1578574409145

https://www.universiteitleiden.nl/en/education/phd-programmes

https://www.eur.nl/en/research/phd-eur/why-pursue-phd-eur

https://www.vu.nl/en/research/taking-phd/index.aspx

https://www.findaphd.com/study-abroad/europe/phd-study-in-netherlands.aspx

https://www.academics.com/jobsearch/position-phd-student+position-research-fellow-research-assistant-research-associate/UVU=

ஃபிரான்ஸ்:

https://www.parisdescartes.fr/en/working-and-studying-at-paris-descartes/

https://www.univ-lille.fr/home/research/doctoral-schools/

https://www.univ-reims.eu/

https://u-paris.fr/en/498-2/

https://www.univ-lyon2.fr/www0-home-157320.kjsp

https://www.univ-montp3.fr/

http://welcome.univ-lorraine.fr/en/research/phd-programs

https://www.u-bordeaux.com/Doctoral-education/French-doctoral-system

https://www.campusfrance.org/en/how-to-enrol-Doctorate-France

https://www.phdportal.com/countries/10/france.html

https://www.findaphd.com/study-abroad/europe/phd-study-in-france.aspx

சுவிட்ஸர்லாந்து:

https://www.epfl.ch/about/working/working-at-epfl/job-openings/

https://jobs.ethz.ch/site/index

https://www.research.uzh.ch/en/funding.html

https://www3.unifr.ch/sp/en/

https://www.unisg.ch/en/forschung/grantsoffice

https://www.unibe.ch/university/employer/job_postings/job_portal/index_eng.html

https://www.unige.ch/dife/sante-social/aides-financieres/

https://www.findaphd.com/study-abroad/europe/phd-study-in-switzerland.aspx

https://www.phdportal.com/countries/27/switzerland.html

இங்கிலாந்து:

https://www.phdportal.com/countries/30/united-kingdom.html

https://www.manchester.ac.uk/connect/jobs/

http://www.bristol.ac.uk/jobs/find/list.html

https://www.sheffield.ac.uk/jobs

https://www2.le.ac.uk/offices/jobs

https://www.ed.ac.uk/human-resources/jobs

https://www.sussex.ac.uk/about/jobs

https://www.birmingham.ac.uk/staff/jobs/index.aspx

https://www.kcl.ac.uk/hr/jobs

https://jobs.york.ac.uk/wd/plsql/wd_portal.show_page?p_web_site_id=3885&p_text_id=1763

https://jobs.leeds.ac.uk/Vacancies.aspx

https://www.jobs.ox.ac.uk/home

https://www.jobs.cam.ac.uk/

ஐர்லாந்து:

https://www.universityvacancies.com/

சீனா, ஜப்பான் மற்றும் கொரியா

சீனா, ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில் அந்தந்த துறைச் சார்ந்தப் பேராசிரியர்களை அணுகலாம். அவரவர் விருப்பப்பட்டால், அவரவர் ஆய்வுத்துறை நிதியிலோ அல்லது அரசாங்க ஊக்கத்தொகை வழியிலோ முனைவர் பட்ட ஆய்விற்கான இருப்பிடத்தைப் பூர்த்தி செய்வர்.

https://www.cucas.cn/china_scholarships/

https://scholarshipfellow.com/chinese-government-scholarship-china-government-scholarship-process/

https://www.scholarshipportal.com/phd/scholarships/china

https://www.scholarshipsads.com/category/country/china-scholarships/

https://www.scholarshipsads.com/category/country/japan-scholarships/

https://www.kyoto-u.ac.jp/en/education-campus/procedures/scholarships/

https://www.scholars4dev.com/category/country/asia-scholarships/japan-scholarships/

********************************************************************************

ஐரோப்பிய நாடுகளில் அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிப் பணிக்கானத் தேடலில் உள்ளோர் மேலதிக தகவல்கள் தேவைப்படின், துறை, பாடங்கள், ஆய்வு அனுபவங்கள் உள்ளிட்டத் தங்கள் விவரங்களோடு என்னைத் தொடர்புக் கொண்டால் என்னால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளேன். nano.vijaythamil@gmail.com

ஏற்கனவே, சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக எழுதப்பட்டப் பதிவினையும் பார்க்கவும், பிறருக்கு பகிர்ந்து உதவவும். சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்

*******************************************************************************

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s